வங்கதேச பிரச்சனை - கொதித்தெழுந்த வானதி சீனிவாசன் | Vanathi Srinivasan | Thanthi TV
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையின்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், வங்கதேசத்தில் தாக்கப்படும் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கொடுக்க முடியாதா ? என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். சட்டமன்றத்தில் துணை மதிப்பீடுகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், கோவையை சிங்கப்பூர் மாதியாக இல்லாவிட்டாலும் கூட திருச்சி அளவிற்கு கூட தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையின்போது குரல் கொடுத்த முதலமைச்சர், வங்கதேசத்தில் அரசாங்க ஆதரவோடு அங்குள்ள நம் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கொடுக்க முடியாதா கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, இவையெல்லாம் பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டிய விஷயம் என்று பதில் அளித்தார்.
Next Story