மோசடி வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர்... அதிரடி காட்டிய காவல்துறை | BJP | TN Police | Thanthi TV
மோசடி வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர்... அதிரடி காட்டிய காவல்துறை | BJP | TN Police | Thanthi TV
கடலூர் மாவட்டத்தில், தனித்தனி மோசடி வழக்குகளில் பாஜக பிரமுகர் உள்பட 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், மீன்சுருட்டியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக 22 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி செய்த புகாரில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த முத்துகுமார் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார், 2 பேரை தேடி வருகின்றனர். குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி எட்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், மருங்கூரை சேர்ந்த அறிவழகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி, 7 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த புகாரில், சி.என்.பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலத்தில் ஏலச்சீட்டு நடத்தி 15 பேரிடம் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், கார்கூடலை சேர்ந்த ஸ்டாலின், அவரது மனைவி வனிதா மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். திட்டக்குடியில் நிதி நிறுவனத்தில் 22 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த புகாரில் தினேஷ் குமார் என்ற உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார். 1 கோடியே 21 லட்சம் வாங்கி மோசடி செய்து, மிரட்டல் விடுத்த புகாரில், வயலூரை சேர்ந்த ராஜ்குமார் என்ற பாஜக பிரமுகரை தனிப்படையினர் கைது செய்தனர்