"சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா?" - அமித்ஷாவை விளாசிய சீமான்
எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் தான் அயோத்தியில் தோற்றுவிட்டீர்கள் என்றும், அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சீமான் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது என தெரிவித்துள்ள சீமான், சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் பூமியில் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர் என சீமான் தெரிவித்துள்ளார். எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள் எனவும், அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார் எனவும் தெரிவித்துள்ள சீமான், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.