அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி-ED கண்ணில் சிக்கிய பிரபல நிறுவனங்கள்-சென்னையில் இறங்கிய துணை ராணுவம்

x

பின்னி மில் இருந்த இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட, அரசுத் துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில், சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

வட சென்னையில் செயல்பட்டு வந்த பிரபல பின்னி ஆலையை, சுமார் 490 கோடி ரூபாய்க்கு இரு பிரபல கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. பதினான்கரை ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடத்தை அந்நிறுவனங்கள் கட்டி முடித்த நிலையில், கட்டிடம் கட்ட சி.எம்.டி.ஏ உட்பட அரசு துறை அதிகாரிகளுக்கு சுமார் 50 கோடி அளவில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இரு நிறுவனங்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை, நுங்கம்பாக்கம், வேப்பேரி மற்றும் பெரம்பூர் உட்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், இரு கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் அதிபர் வீடுகளில் துணை ராணுவத்தினர் உதவியுடன் நடைபெற்ற இந்த சோதனை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்