அதிவேகமாக சென்ற பைக்! தனியார் பேருந்தில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி | Bike Accident

x

மதுரையில் தனியார் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ.காலனி பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் துரையரசன், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரையரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்