அடங்காத வெறி தப்பினால் அடுத்த குறி - அதிகாலை வெளிவரும் பெண்களுக்கு அதிர்ச்சி..
கன்னியாகுமரியில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை வேளையில் ஏழுச்சாட்டுபொத்தை பகுதியில் வீட்டின் வெளியே நின்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்பெண் சுதாகரித்துக் கொண்டதால், அங்கிருந்து தப்பி, வரும் வழியில், பால் வாங்க நின்றிருந்த மூதாட்டியிடம் 6 பவுன் செயினை பறித்துள்ளார். அப்போது செயின் அறுந்ததால், பாதி செயினை கொள்ளையன் எடுத்துச் சென்றுள்ளான். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Next Story