திடீரென தீ பற்றி எரிந்த இ-பைக்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் ஒரு தனியார்
பள்ளி முன்பு நிறுத்தப்பட்ட இ பைக்கின் பேட்டரியில்
இருந்து இன்று காலை புகை வந்த நிலையில், பைக்
திடீரென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள், தீயணைப்பான் கொண்டு
தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். சாலை அருகே
மின்சார கம்பத்தின் கீழ் கொழுந்து விட்டு இ.பைக் எரிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் தண்ணீர் கொண்டு பீய்ச்சி தீயை அணைத்தனர். இ பைக் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது. இது பற்றி திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story