பைக் விஷயத்துல ஆசைப்பட்டு இப்படி ஏமாந்துடாதீங்க.. இந்த மாதிரி நபர்களிடம் கவனம்..
காஞ்சிபுரத்தில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மூன்றே மாதத்தில் பல லட்சங்களை சுருட்டி கொண்டு தலைமறைவான பலே ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பாதி விலையில் கொடுப்பதாக பொது மக்களிடம் ஆசை வார்த்தை கூறி, 250க்கும் மேற்பட்டவர்களிடம் தலா 40 ஆயிரம் ரூபாய் என சுமார் ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளனர். இதுகுறித்து காஞ்சி காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story