பவானி தேவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து | Bhavani Devi | Udhayanidhi Stalin
தேசிய வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானி தேவியை வாழ்த்தி மகிழ்கிறோம் என்றும், ஒலிம்பிக் வீராங்கனையான பவானி தேவி, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனை என்பது கூடுதல் சிறப்பு என்று கூறியுள்ளார். திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Next Story