இரவில் சுற்றி திரியும் கருப்பு உருவம்.. மரண பீதியில் மக்கள் - அதிர்ச்சி வீடியோ
இரவில் வலம் வரும் கரடி - பொது மக்கள் பீதி
அம்பை மலை அடிவார பகுதியில் சுற்றி திரியும் கரடியினால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அயன் சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, உள்ளிட்ட 5 - க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு இரவு நேரங்களில் கரடி ஒன்று சுற்றி திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Next Story
