8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம்
வங்கதேச தலைநகர் டாக்காவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமிக்கு நீதி கேட்டு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உறவினர் ஒருவராலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story