டியூஷன் படிக்க வந்த மாணவியை கடத்திய டீச்சர்.. 45 நாட்களுக்கு பிறகு கிடைத்த செய்தி -அதிர்ந்த போலீசார்

x

பெங்களூரில், மாணவி ஒருவர் ஆசிரியரால் கடத்தப்பட்ட நிலையில் 45 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என கடந்த நவம்பர் 23ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவிக்கு டியூசன் எடுத்த அபிஷேக் கவுடா என்னும் ஆசிரியர் மாணவியை கடத்திவிட்டதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் அபிஷேக் கவுடா, மாணவியுடன் வாடகை வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், மாணவியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில் அபிஷேக் கவுடாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்