சென்னை அருகே பெரும் சிரமத்துக்கு பின் வானில் தெரிந்த ரஜினியின் 2.O - மக்கள் பகிர்ந்த விஷயங்கள்

x

மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பலூன் திருவிழாவில் அதிகளவில் பலூன்கள் பறக்கவிடப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற 10வது சர்வதேச பலூன் திருவிழாவில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த ஏர் பலூன் பைலட்கள் பங்கேற்றனர். ஆரம்பத்தில் காற்றின் வேகம் குறைந்திருந்தால் 10-க்கும் மேற்பட்ட பலூன்களை பறக்கவிட முயற்சித்தனர். எனினும், மாலை நேரத்தில் மிதமான மழை பெய்ததால், பலூன்களை பறக்கவிடமுடியாத நிலை ஏற்பட்டது. எனினும், பார்வையாளர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சிக்கு பிறகு ரஜினியின் 2.O பலூன் உட்பட 2 பெரிய பலூன்கள் மற்றும் 2 சிறிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஞாயிற்றுகிழமை என்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 200 ரூபாய் கடணம் செலுத்தி இந்த பலூன் திருவிழாவை பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்