அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- விதிமுறைகள் வெளியீடு

x

மதுரை அவனியாபுரத்தில் 14-ஆம் தேதி பொங்கலன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள, காளைகளை அழைத்து வரும் உரிமையாளரும், உடன் வரும் ஒரு நபரும் சரியாக காலை 05.00 மணிக்கு திருப்பரங்குன்றம் சாலை, முல்லை நகரில் உள்ள இடத்தில் தங்களது காளைகளை வரிசைப்படுத்திக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரத்தில் ஆயிரத்து 100 காளைகள் அவிழ்த்து விடப்படுவதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதன் பேரில் காலை 5 மணி முதல், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 100 காளைகள் என மாலை 4 மணி வரை காளைகள் அனுமதிக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளை திருப்பரங்குன்றம் ரோடு வழியாகவும், வெள்ளைக்கல் ரோடு வழியாகவும் ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளைகளை கொண்டு வருபவர்கள், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன்கள் காளை உரிமையாளர்களின் ஆதார் அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முற்படும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், காளையுடன் வரும் 2 பேரும் மது அருந்தி விட்டு வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் காளைகளை, செம்பூரணி ரோடு தண்ணீர் தொட்டி அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில், காளை உரிமையாளர்கள் பாதுகாப்பாக பிடித்துச் செல்ல வேAvaniyapuram Jallikattu – Rules releasedண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்