அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விபத்து - ஓடோடி வந்த ஆட்டோ டிரைவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் பயன்பாடு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீப்பிடித்து அதிகளவில் புகை வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகாமையில் இருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் அங்குள்ள தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Next Story