"அப்படி தான்டா நிறுத்துவோம்" - கார் டிரைவர்கள் vs ஆட்டோ டிரைவர்கள் - வெடித்த பிரளயம்.. ரெண்டான சாலை

x

பள்ளிபாளையத்தில் ஏராளமான வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளனர். நால்ரோடு பகுதிகளில், மீட்டர் ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகளும் 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தனியார் நிறுவனத்தின் மூலம் ஏராளமான வாடகை கார்களும் அப்பகுதியில் இயங்கி வருகின்றன... இந்நிலையில் புதன் சந்தை பகுதியில், தனியார் கார் ஓட்டுநர் ஒருவர் அத்துமீறி தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக கூறி, உள்ளூர் பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர்கள், தனியார் நிறுவன கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில் அங்கு ஒன்று கூடிய தனியார் கார் ஓட்டுநர்கள், உள்ளூர் வாடகை கார் ஓட்டுநர்களுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அவர்களை காவல் நிலையம் வருமாறு அறிவுறுத்தி சென்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதி அருகே மற்றொரு தனியார் கார் ஓட்டுநர் ஒருவர் பயணிகளை ஏற்றி சென்றதாக கூறி பேருந்து நிறுத்தத்தில் உள்ள மீட்டர் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் தனியார் காரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்தவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்