இணையத்தில் வைரலாகி வரும் பெண்கள் பேசிய ஆடியோ | VIRAL AUDIO

x

பிரணவ் நகைக்கடையில், பணத்தை பறிகொடுத்து ஏமாற்றத்திற்கு உள்ளான பெண்கள் வேதனையுடன் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் நகைக் கடையில், கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பணத்தை செலுத்தினர். தற்போது பணமோ நகையோ திரும்ப கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பல்வேறு குறைகளைக் கூறி புகாரை ஏற்க போலீசார் மறுத்து, பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தங்கள் பணத்தை மோசடி செய்தவர் சொகுசாக வாழ்ந்து வரும் நிலையில், கடின உழைப்பால் சேமித்த பணத்தை கொடுத்து விட்டு பரிதவிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பும் ஆடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்