ATM சென்ற பெண்ணுக்கு அடித்த லக்..திடீரென கத்தை கத்தையாக கொட்டிய பணம்-அடுத்து நடந்தது தான் சுவாரஸ்யமே

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து தானாக கொட்டிய 49 ஆயிரம் ரூபாயை, பெண் ஒருவர் எடுத்து வங்கியில் ஒப்படைத்தார்.

தனியார் வங்கி ஏ.டி.எம்.மில், துர்கா செல்வம் என்பவர் பணம் செலுத்த சென்றார். அப்போது, கத்தை கத்தையாக வந்த 500 ரூபாய் நோட்டுகளை​ எடுத்து வங்கிக்கிளையில் ஒப்படைத்தார். சி.சி.டி.வி. காட்சிகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்ததில், அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள அஜித் என்பவர், ஏ.டி.எம்மில் பணத்தை டெபாசிட் செய்து, அதனை ஏற்றதாக எண்ணி புறப்பட்ட நிலையில், பின்னால் வந்த துர்கா செல்வம் டெபாசிட் செய்ய முயன்றபோது பணம் வெளியே வந்தது உறுதி செய்யப்பட்டது‌. வாடிக்கையாளர் அஜித்திடம் பணத்தை வங்கி அதிகாரிகள் ஒப்படைத்த நிலையில், துர்கா செல்வத்தின் நேர்மையை பாராட்டின


Next Story

மேலும் செய்திகள்