ஏ.டி.எம் பணம் மிஷினில் தொங்கி கொண்டிருந்த சாவி... பதறி போன மக்கள்.. சிவகங்கையில் அதிர்ச்சி

x

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம்மில் பணம் வைக்க வந்த வங்கி ஊழியர்கள், அதில் பணத்தை வைத்து விட்டு, கவனக்குறைவினால் லாக்கர் சாவியையும் வைத்து விட்டு சென்றனர். வாடிக்கயாளார் ஒருவர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வங்கி அதிகாரிகளை வரவழைத்து ஏடிஎம்மில் வைக்கப்பட்ட பணத்தை சரி பார்த்தனர். அதில் வைக்கப்பட்ட 12 லட்சம் ரூபாய் பணம் சரியாக இருந்தததை தொடர்ந்து வங்கி அதிகாரிகளிடம் சாவியை ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்