ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! "நீதி கிடைக்கும் வரை தொடரும்.."- எச்சரித்த பா.ரஞ்சித்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான திருமதி ஆம்ஸ்ட்ராங் தனது மகளுடனும், மாநில தலைவர் ஆனந்தன், நடிகர் தீனா, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தீனா, 2026 தேர்தலில் திருமதி ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், விசாரணை திசைமாறினால் பலவடிவில் போராட்டம் நகரும் என்று எச்சரித்தார்.
Next Story