ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பம்.. மொத்தத்திற்கும் காரணமான `சம்போ செந்தில்' இவர் தான்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதலில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 10 பேரையும் போலீசார் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், விசாரணையின் முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட அருள் என்பவருக்கு, அதிமுக முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் மலர்கொடி, சுமார் 50 லட்ச ரூபாய் பணம் டெபாசிட் செய்தததாகவும், அந்த பணத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வாங்கப்பட்டதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. உடனடியாக, வழக்கறிஞர் மலர்கொடி, தமிழ் மாநில காங்கிரஸின் முன்னாள் நிர்வாகி ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மூவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஹரிஹரன் அளித்த தகவலின் அடிப்படையில், பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தேடி வருவது பரபரப்பை மேலும் கூட்டி இருக்கிறது. சம்போ செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே இதற்கு முன் பல முறை நேரடி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கொலையாளிகளுக்கு சம்போ செந்திலும் 4 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.