வீடியோ மூலம் உயிருடன் வந்த ஆம்ஸ்ட்ராங்.. பார்த்ததும் கதறி அழுத மனைவி பொற்கொடி | Armstrong
ஆம்ஸ்ட்ராங்கின் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில், ஆம்ஸ்ட்ராங் குறித்த காணொளியை பார்த்து அவரது மனைவி பொற்கொடி கதறி அழுதார்...
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி, சென்னை பெரம்பூரில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, ஆம்ஸ்ட்ராங் குறித்த காணொளி திரையிடப்பட்டது. அதனை. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் அவரது உறவினர்களும் பார்த்தனர். அந்த காணொளியில் ஆம்ஸ்ட்ராங் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு, ஆம்ஸ்ட்ராங் மகளின் பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. அதுவரை அமைதியாக காணொளியை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு திரையில் வந்த போது, அதனை பார்த்து கதறி அழுதது, அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது...