தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை கைதிகள் உள்ள சிறையில் நடந்த அதிர்ச்சி - அதிர்ந்த சிறை அதிகாரிகள்
பூந்தமல்லி சிறையில் கடந்த வாரம் சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்ட போது, கைதிகளின் அறையில் இருந்து கஞ்சா, செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 23 பேர் உட்பட 38 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். துணை ஜெயிலர் உட்பட ஆறு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் இந்நிலையில் இந்த சிறையில் மீதமிருந்த எட்டு பேரும் கோவை, கடலூர் உள்ளிட்ட சிறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டுள்ளனர். தற்போது பூந்தமல்லி சிறையில் கைதிகள் யாரும் இல்லாமல் போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இனி வேறு வழக்குகளில் கைது செய்யப்படும் புதிய கைதிகள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story