தமிழகத்தை அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. 2வது கணவனுக்காக பழி தீர்த்த பெண் தாதா.. புளியந்தோப்பு அஞ்சலையின் கதை
ஆந்திராவில் இருந்து பிழைப்பு தேடி வந்த , அந்த குடும்பத்திற்கு ..அடைக்கலம் கொடுத்தது வட சென்னையில் உள்ள பிரதான ஆட்டு தொட்டிதான்
கணவன்-மனைவி இருவரும் ஆட்டு தொட்டியில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யக்கூடிய பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை தான் அஞ்சலை.
புளியந்தோப்பு பகுதியில் சுற்றி திரிந்த சிறுமி ..பின்னாளில் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவார் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று
அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரை காதலித்து திருமணம் செய்த அஞ்சலை, கையில் இருந்த சிறிய தொகையை ஆடு மாடுகளை வாங்கி விற்பவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து வந்து இருக்கிறார்.
வட்டி தொழில் சூடு பிடிக்க தனது எல்லையை புளியந்தோப்பு பகுதி முழுவதுமாக விரிவுபடுத்தினார் அஞ்சலை. ஒரு கட்டத்தில் பணம் தேவை என்றால் அஞ்சலை அக்காவை போய் பாரு...என்று சொல்லும் அளவுக்கு ஏரியாவில் அவரது
செல்வாக்கு உயர்ந்தது. மேலும், இதே காலகட்டத்தில் தான் அந்தலைக்குப் பல ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட தொழிலை ராயப்பேட்டை பகுதியிலும் விரிவுபடுத்தி இருக்கிறார்
அப்போது தான் ராயப்பேட்டை சிவில் சப்ளை குடோனில் வேலை பார்த்து வந்த ஆற்காடு சுரேஷூடன் அஞ்சலைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கணவர் முத்துவுக்கு தெரியவர சத்தமின்றி அஞ்சலையை விட்டு விலகி இருக்கிறார்
இதற்கிடையே குடோனில் நடந்த அரிசி கடத்தல் விவகாரத்தில் நடந்தேறிய கொலைக்காக ஆற்காடு சுரேஷ் சிறை சென்றார். பின்னர் சில ஆண்டுகளில் வெளியே வந்த ஆற்காடு சுரேஷ், அஞ்சலையுடன் சேர.. அந்தலையின் வட்டி தொழில் அசூர வேகத்தில் வளர்ந்து ஆந்திரா வரை விரிவடைந்தது.
இதே நேரத்தில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி சின்னாவின் காதல் பார்வை அஞ்சலையின் பக்கம் திரும்பியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பல கட்டப்பஞசாயத்திலும் சின்னா குறுக்கிட்டதால், பூந்தமல்லி கோர்ட்டில் வைத்து சின்னா மற்றும் அவரது வழக்கறிஞரையும் வெட்டி கொன்றார்.
இதனை தொடர்ந்து ஆற்காடு சுரேஷின் செல்வாக்கு மேலும் அதிகரிக்க, அஞ்சலையும் தொழிலில் கொடிகட்டி பறந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்து ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட ஆறாத வஞ்சத்துடன் இருந்து இருக்கிறார் அஞ்சலை. மேலும் இதன் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக வந்த தகவல் அவரை கொதிப்படையச் செய்து இருக்கிறது.
ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட பின் அஞ்சலையின் செல்வாக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் வட்டிக்கு கொடுத்த பணம் சுமார் ஒன்றை கோடி வரை முடங்கியது. பணம் வாங்கியவர்களும் அவருக்கு எதிராக துணிந்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்க தொடங்கினர்
தான் உருவாக்கிய கோட்டை..தன் கண் முன்னே பறிபோவதை கண்ட அஞ்சலை ..இதற்கு காரணமான ஆம்ஸ்ட்ராங்கை பழீ தீர்க்க ..புன்னை பாலு, அருள், ஹரிகரன் உள்ளிட்டோர்களுடன் இணைந்து செயல்பட்டதும், இந்த மாஸ்டர் பிளானுக்காக பல லட்சங்களை அஞ்சலை கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது