அரியலூர் மணமகன் தாலி கட்டிய மறுநொடி கண்கலங்கி அழுத மியான்மர் பெண் - வைரலாகும் வீடியோ

x

அரியலூரில் இந்துமுறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மியான்மர் பெண்ணை, தமிழக இளைஞர் கரம்பிடித்தார். இரசுலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதிவதனன், கடந்த 7 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அப்போது மியான்மரை சேர்ந்த ஏய் ஏய் மோ என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்ற நிலையில், மணமகன் தாலி கட்டியவுடன் மணப்பெண் மோ கண்கலங்கி உணர்ச்சி வயப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்