2 பெண்களை சுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur | Police
இரண்டு பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். பெரியவளையம் கிராமம் முந்திரி காட்டு பகுதியில் பன்றி வேட்டைக்காக சென்ற பால்ராஜ், அங்கிருந்த மலர் விழி, கண்ணகி ஆகிய இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். வழக்கை விசாரித்த அரியலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றவாளி பால்ராஜிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Next Story