பள்ளி குழந்தைகளை அலறவிட்ட ஸ்கூல் பஸ் டிரைவர் - சம்பவத்தை பார்த்து விரட்டிய மக்கள்..ஷாக் வீடியோ
பள்ளி குழந்தைகளை அலறவிட்ட ஸ்கூல் பஸ் டிரைவர் - சம்பவத்தை பார்த்து விரட்டிய மக்கள்..ஷாக் வீடியோ
அறந்தாங்கி அருகே மாணவர்கள் இருந்த பள்ளி வாகனத்தை மதுபோதையில், மின்கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. அறந்தாங்கி குரும்பக்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், மாத்தூர் ராமசாமிபுரத்தை சேர்ந்த கார்த்திக் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், மாணவர்களை வீட்டில் விட பேருந்தை இயக்கியபோது, அரசர்குளம் கீழ்பாதி பகுதியில் மின்கம்பத்தில் மோதியதாக தெரிகிறது. மின்கம்பம் உடைந்த நிலையில், பேருந்தை நிறுத்தாமல் கார்த்திக் ஓட்டிச் சென்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், பள்ளி வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த பேருந்தில், ஓட்டுனர் கார்த்திக் மது போதையில் இருந்ததை கண்டு, பொதுமக்கள் கேள்வி கேட்டனர். இதனால், ஓட்டுநர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.