"40 வருசமா இதுதான் பொழப்பு...விட முடியல... எல்லாரும் மாறிட்டாங்க" வைராக்கியமாக வாழும் தம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தம்பதி அகப்பை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் வைக்கும் போது, அகப்பையை பயன்படுத்துவது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது. தற்போது பெரும்பாலும் கிராம பகுதிகளிலும், கோயில் திருவிழாக்களிலுமே இந்த அகப்பை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுப்பையா-ராஜம்பாள் தம்பதி, தள்ளாத வயதிலும் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
Next Story