விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு சிறுவனை கடித்து குதறிய தெருநாய் -காப்பாற்ற சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது ஐந்து வயது மகன் நிர்மல்ராஜ், வீட்டின் பின்புறமுள்ள வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த தெருநாய் கடித்துக் குதறியுள்ளது. இதில், வாய்ப்பகுதி முழுவதும் நாய் கடித்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை நிர்மல்ராஜுக்கு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, மீட்க முயன்ற தந்தை பாலாஜியையும், அந்த நாய் கடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்