அப்பாவுவுக்குஎதிரான அவதூறு வழக்கு - ட்விஸ்ட் கொடுத்த சென்னை ஹைகோர்ட் | Appavu | Chennai High Court
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாக கூறியிருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அப்பாவுக்கு எதிராக அதிமுக வக்கீல் அணி இணைச் செயலாளர் ஆர்.எம். பாபு முருகவேல், சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அப்பாவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என கூறி, அப்பாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாபு முருகவேல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாபு முருகனின் வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி, அவரது மேல்முறையீடு மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.