``யார் அந்த சார்..? காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது..'' - RBU பாய்ச்சல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எதுவுமே நடக்காதது போல் அரசு கடந்து செல்வது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். யார் அந்த சார் என்ற கேள்விகள் தொடர்வதாகவும், அரசிடம் அதற்கு பதில் இல்லை எனவும் கூறியிருக்கும் அவர், விசாரணையே தொடங்கவில்லை, அதற்குள் ஒருவர்தான் குற்றவாளி என்று சென்னை ஆணையர் சொல்வதாக விமர்சித்தார். காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாததனால்தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது எனவும் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார்.
Next Story