அண்ணா பல்கலை. விவகாரம் "ஐடி இல்லாமல் உள்ளே வரக்கூடாது" கேட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் | Chennai
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழக நுழைவு வாயிலில், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான க்யூ.ஆர் கோடு அடங்கிய அட்டை ஒட்டப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டான நேரத்தில் இந்த செயலி மூலம் தகவல் கொடுத்தால் போலீசார் உடனடியாக வருவார்கள் என அந்த அட்டையில் கூறப்பட்டுள்ளது. ஐடி இல்லாமல் உள்ளே வரக்கூடாது எனவும் அட்டை ஒட்டப்பட்டுள்ளது.
Next Story