``யாருக்கும் பாதுகாப்பு இல்லை'' - மாணவி விவகாரம் - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

x

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு தான் கொடூரமான எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார்.

சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு தமிழக மக்கள் அளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்