ஞானசேகரனை பிடித்து விடுவித்து மீண்டும் பிடித்த போலீசார் - அடுத்த திடுக் தகவல்
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.
குற்றவாளியை புகார் அளித்த இரவே பிடித்து விடுவித்த போலீசார்.
போலீசார் நெருங்கியவுடன் வீடியோ ஆதாரங்களை அளித்த குற்றவாளி.
செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்களை ரிகவரி செய்த போலீசார்.
சிசிடிவி பதிவுகள், செல்போன் டவர் ஆகியவற்றை ஆய்வு செய்து உறுதி படுத்தியப்பின் கைது செய்துள்ளனர்.
வீட்டிலும் சோதனை நடத்தி அணிந்து இருந்த தொப்பியை பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் போது அங்குள்ள பெண்களையும் பாலியல் துன்புறுத்தல் செய்வது ஞானசேகரனின் வழக்கம்.
அதை அறிந்தே போலீலார் முதலில் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது தான் ஏதும் செய்யவில்லை என மறுத்ததால் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தை போலீசார்.
ஆதாரங்களை அளித்து விட்டதால் போலீசார் தன்னை நெருங்கமாட்டார்கள் என நினைத்து தப்பி செல்லாமல் இருந்துள்ளதால் மீண்டும் சிக்கி கொண்டார்.