“அண்ணா யுனிவர்சிட்டியில் நடப்பது இது முதல் முறை அல்ல’’ - பகீர் தகவல் சொல்லும் பேராசிரியர்கள்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ள விவகாரம், அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு முன்பும் பலமுறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றும், மாணவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று, பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரவு 8 மணிக்கு கூட விடுதிகளில் இருந்து வெளியேறி ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசுகின்றனர் என்றும், பலர் அத்துமீறல் செயல்களிலும் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
Next Story