அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை... தமிழகத்தையே ஸ்தம்பித்த விட்ட அதிமுக...உச்சகட்ட பரபரப்பு

x

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கரூரில் போலீசாரின் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்