ஆளுநருடன் முடிந்த மீட்டிங்..அடுத்து இந்த மூவரை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய குழு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு டிஜிபி,, சென்னை காவல் ஆணையர் மற்றும் மாநில மகளிர் ஆணையத் தலைவி உள்ளிட்டோரை தேசிய மகளிர் ஆணைய குழு சந்தித்தது. முதல் நாள் விசாரணைக்குப் பிறகு ஆளுநரை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய குழுவினர், தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அப்போது தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் அருண் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரியை சந்தித்து வழக்கு தொடர்பாக ஆலோசித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது.
Next Story