"என்ன ஆனது?" - திடீரென கேள்வி எழுப்பிய அண்ணாமலை
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் என்ற விவகாரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அமைச்சர்கள் பங்கேற்கும் தனியார் நிகழ்ச்சிகளில், ஊடகங்கள், தாங்கள் பெற்ற செய்திக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று என்று கூறியுள்ளார். எங்களுடைய கேள்வி என்னவென்றால், தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 44 ஆயிரத்து 42 கோடி எங்குச் சென்றது? என்பது தான் என்று கூறியுள்ளார். சிதிலமடைந்த 10 ஆயிரம் பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அடிப்படைத் தேவைகள் எதையுமே நிறைவேற்றாமல், எதற்காக திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும், புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.