``அண்ணனுக்கு போடுங்க''.. மாலையை ஏற்க மறுத்த அண்ணாமலை - தொண்டர்கள் நெகிழ்ச்சி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொண்டரின் மாலையை ஏற்க மறுத்து, மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு அணிவித்த சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் வேத சுப்பிரமணியத்தின் மணிவிழா நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது, தொண்டர் கொண்டு வந்த தாமரை மாலையை வாங்க மறுத்த அண்ணாமலை, அதை அருகில் இருந்த மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Next Story