திமுக நிர்வாகிகளோடு இருக்கும் கைதி ஞானசேகரன் - போட்டோக்களை போட்டு பரபரப்பி கிளப்பிய அண்ணாமலை

x

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன், திமுக நிர்வாகிகளோடு இருக்கும் புகைப்படங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கைது செய்யப்பட்டவர் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்தவர் என்பது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மீதான முந்தைய பல வழக்குகளில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவரை உள்ளூர் காவல் நிலைய கண்காணிப்பு பட்டியலில் வைக்காமல் விடுவித்தது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளையும் அண்ணாமலை எழுப்பியுள்ளார். திமுக நிர்வாகிகள் அழுத்தம் காரணமாக குற்றவாளிக்கு எதிரான வழக்குகளை போலீஸ் விசாரிக்கவில்லை என்றும் அது குற்றவாளி தொடர்ச்சியாக குற்றங்களை செய்ய இடமளித்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் எவ்வளவு காலம்தான் தமிழக மக்கள் இதனை பொறுத்துக் கொள்ள முடியும்? என விமர்சித்து இருக்கும் அண்ணாமலை, இதற்கு முதலமைச்சர் பதிலளிப்பாரா? என கேள்வியை எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்