பால்வாடியில் மலம் கழித்த சிறுமி.. அக்கா, தங்கை மரணம் - உடனே டீச்சர்களுக்கு பறிபோன வேலை
இளையான்குடியில், சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் சோபி, கிஸ்மிகா உயிரிழந்த விவகாரத்தில், தொடக்க பள்ளி ஆசிரியர் தாயிமேரி மற்றும் அங்கன்வாடி ஆசிரியர் தினேஷ் அம்மாள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிறுமி கிஸ்மிகா அங்கன்வாடியில் மலம் கழித்த நிலையில், தினேஷ் அம்மாள் அதை சுத்தம் செய்ய மறுத்துள்ளார். உடனே தொடக்க பள்ளியில் இருந்த அக்கா சோபியை அழைத்துக் கொண்டு இருவருமாக கண்மாய்க்கு சென்றுள்ளனர். அப்போது தங்கை நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது குழந்தைகளின் உடல், அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story