ஆண்டிப்பட்டி இருவர் மரணத்தில் கொடூர திருப்பம்- அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் Andippatti
ஆண்டிபட்டியில் விவசாயிகள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தேனியை சேர்ந்த மணி மற்றும் கருப்பையா என்ற விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி பலத்த காயங்களுடன் சடலங்கலாக மீட்கப்பட்டனர். இதில் இருவரின் பிரேத பரிசோதனை முதல் அறிக்கை வெளியான நிலையில், மணியின் தலை நசுக்கப்பட்ட நிலையிலும், கருப்பையாவின் உடலில்18 இடங்களில் வெட்டப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story