"உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை" - பழங்குடியின மக்களின் “மொற்ட்வர்த்“ விழா கொண்டாட்டம்
உதகை அருகே தோடர் பழங்குடியின மக்களின், பழமையான “மொர்ட்வர்த்“ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரியில் 70 கிராமங்களில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில், ஆண்டுதோறும் புத்தாண்டு தொடக்கத்தில் அவர்கள் மொர்ட்வர்த் விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மொர்ட்வர்த் விழா, முத்தநாடு கிராமத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில், பாரம்பரிய உடை உடுத்தி பங்கேற்ற பழங்குடியின ஆண்கள், புத்தாண்டு சிறப்பாக அமையவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து பாரம்பரிய நடனமாடிய ஆண்கள், காணிக்கை செலுத்தி சாமியை தரிசித்தனர். இதனிடையே இளைஞர்கள், இளவட்டக் கல்லை தூக்கி தங்களது பலத்தை நிரூபித்தனர்.
Next Story