"சாதி என்கிற.." மேடையில் ராமதாஸ் உருக்கம்.. கலங்கிய பாமக நிர்வாகிகள்
தன்னை சாதி என்கிற குறுகிய வட்டத்தில் தமிழக மக்கள் சுருக்கி விட்டார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய 'போர்கள் ஓய்வதில்லை - என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னை சாதி என்கிற குறுகிய வட்டத்தில் சுருக்கி விட்டார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார். மும்மூர்த்திகள் தன்னிடம் வந்து வரம் கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு வேண்டும் என்று கேட்பேன் என்றும் அவர் கூறினார்.
Next Story