கடலை நோக்கி சென்ற... அரிய வகை ஆமைகள் - வியந்த சென்னைவாசிகள்

x

தனியார் தொண்டுநிறுவன பங்களிப்போடு நடைபெற்ற இந்த நிகழ்வில் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகளின் முட்டைகள் சென்னையில் பழவேற்காடு, பெசன்ட்நகர், நீலாங்கரை, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் தற்காலிக கூண்டுகள் அமைத்து பாதுகாக்கப்பட்டது. 45 முதல் 55 நாட்கள் வரை அனைத்து வகையான வானிலை சூழலிலும் பாதுகாத்து ஆமைக்குஞ்சுகளாக கடலில் விடும் நிகழ்வு 2 நாட்களாக நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆமை குஞ்சுகள் மாலை வேளையில் கடலில் விடப்பட்டது. இந்நிகழ்வை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு மகிழ்ந்தனர் .


Next Story

மேலும் செய்திகள்