அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு - யாருக்கெல்லாம் குறி?
அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசும் , குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். வடக்கு கரோலினா மாகாணம் காஸ்டோனியா நகரில் டிரம்ப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தாம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடிபெயர்ந்த லட்சக்கணக்கானோரை நாடு கடத்துவேன் என்று
எச்சரித்தார். அனுமதியின்றி புலம் பெயர்ந்தவர்களால்
அமெரிக்கா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில்
அது மாறும் என்றும் டிரம்ப் கூறினார். டிரம்பின் வாக்குறுதியை வரவேற்று கூட்டத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர்.
Next Story