கரண்ட்டால் தலைகீழாக மாறிய சிறுவன் வாழ்க்கை - தமிழக அரசுக்கு பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை | Ambathur

x

சென்னை அம்பத்தூரில் மின் மாற்றியால் மின்சாரம் பாய்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்ற பெற்றோர் போராடும் சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தை சேர்ந்த செந்தில்குமரன் - சத்யா தம்பதியின் மகன் ஸ்வாதிஸ்வரன். ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த அக்டோபர் இருபதாம் தேதி, அருகில் உள்ள பூங்காவில் விளையாடியபோது, மின்மாற்றியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். 50 விழுக்காடு காயங்களுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடை பகுதியில் இருந்து தசைகளை எடுத்து வயிறு, மார்பு பகுதியில் வைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். கடந்த நவம்பர் 30ஆம் தேதி சிறுவன் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், 2 மாதங்களாக பணிக்கு செல்ல முடியாத‌தால், கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள பெற்றோர், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். வாழ்வாதாரத்திற்கு வழியில்லாததால், அரசு உதவி செய்து தங்களது மகனை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்