மதுபோதையில் கையை கிழித்து ரத்தத்தை தெளித்த இளைஞர்

x

நாகையில் கையை கிழித்துக் கொண்டு ரத்தத்தை தெளித்து, போலீசாரிடம் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் கடைத்தெரு அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மாரிமுத்து என்ற இளைஞரின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் கடுமையான மதுபோதையில் இருந்த நிலையில், வாகனத்தில் மதுபாட்டில்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் தனது இடது கையை சரமாரியாக கிழித்துள்ளார். பீறிட்டு வந்த ரத்தத்தை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது போதையில் இருந்த இளைஞர் தெளித்து அலப்பறையில் ஈடுபட்டார். இதனை தட்டிக் கேட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மாரிமுத்துவை மடக்கிப் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்