சைக்கோ கணவன் செய்த கொடூரம்.. கோமாவுக்கு சென்ற மனைவி - சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

சைக்கோ கணவன் செய்த கொடூரம்.. கோமாவுக்கு சென்ற மனைவி - சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்
x

புழுதிவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐடி ஊழியர்கள் பரதன் - சுரேகா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு,12 வயது,7 வயதில் இரு மகன்கள் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகளை கடந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி 7 வயது சிறுவன் செல்போனை கையில் வைத்து விளையாடியதை தந்தை பரதன் கண்டித்துள்ளார். அதற்கு மனைவி சுரேகா ஏன் குழந்தையை திட்டுகிறார்கள் என கேட்டதாக தெரிகிறது.இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.அப்போது மனைவி சுரேகாவின் இடது பக்க தலையை பிடித்து கண்மூடித்தனமாக சுவற்றில் இடித்ததில்,அவர் சுரேகா மயங்கி விழுந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சுரோக தனியார் மருத்துவமனையில் 23-நாட்களாக கோமாவில் இருக்கிறார். இது குறித்த புகாரைத்தொடர்ந்து, போலீசார் சுரேகாவின் கணவன் பரதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்