சென்னை ஏர்போர்ட்டில் விமான நிறுவன ஊழியரே பார்த்த கோல்மால் வேலை

x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மிகப் பெரிய அளவில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், விமானங்களுக்காக பயணிகள் காத்திருக்கும் டிரான்சிஸ்ட் பகுதியில் இன்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் நீண்டநேரம் சுற்றித்திரிந்ததை கண்டு சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில், உள்ளாடை மற்றும் சூ சாக்ஸ்களில் தங்க பசைகளையும், தங்க கட்டிகளையும் ஊழியர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவர் தங்கத்தை விமான நிலை ஊழியருக்கு கைமாற்றி விட்டு துபாய் செல்வதற்காக டிரான்சிஸ்ட் பகுதியில் காத்திருந்தது தெரியவர, சுமார் 6 கோடியே 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலைய ஊழியர் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பயணியையும் கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்